Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகை!

Jul 16, 2026 - 10:05 AM

புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகை!
Mobitel Inner 1278

தமிழ் சினிமாவில் மூத்த நடிகையும் 1975 முதல் 86 வரை ஹீரோயினாக வலம்வந்தவர் தான் சுமித்ரா. இன்றைய தலைமுறைக்கு சுமித்ராவை நினைவுபடுத்த வேண்டும் என்றால் அஜித்தின் வலிமை படத்தை உதாரணமாக சொல்லலாம். வலிமை படத்தில் அஜித்தின் அம்மாவாக நடித்தவர் தான் சுமித்ரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களில் 100+ திரைப்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் இவர். 

சிவாஜி, கமல், ரஜினிகாந்த் என அனைவருடனும் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற சுமித்ரா, 90களில் வாய்ப்புகள் குறைந்து போக கன்னட இயக்குனரான ராஜேந்திர பாபுவை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் கேரக்டர் ரோலில் அவ்வப்போது நடித்து வருகிறார் சுமித்ரா. ராஜேந்திர பாபு - சுமித்ரா தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள். 

இதில் மூத்த மகள் உமா சங்கரி 19 தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு சில படங்களே பெயர் சொல்லும் படங்கள். உமாவை 'வீரநடை' என்ற படம் மூலம் சீமான் தான் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு சத்யராஜ் - சிபிராஜ் நடித்த 'கோவை பிரதர்ஸ்', தங்கர்பச்சானின் 'தென்றல்', பார்த்திபனின் 'சூரி', விஜயகாந்த் உடன் 'சொக்கத் தங்கம்' என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

கே. பாக்யராஜ் இயக்கிய 'சொக்க தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்தின் சகோதரியாக நடித்த பாத்திரம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் பாத்திரம் உமாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்தே, பார்த்திபனுடன் இணைந்து நடித்த 'கடல் பூக்கள்' மற்றும் 'தென்றல்' போன்ற படங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய பாத்திரங்களில் நடித்து உமா தனது திரை வாழ்க்கையைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார். 

மலையாளத்தில் 'குபேரன்', கன்னடத்தில் 'உப்பிடடா MBBS' என மெகா ஹிட் படங்களில் நடித்தார். ஆனால் விரைவில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது. சினிமாவில் இருந்து சீரியல் பக்கம் சென்ற உமா, தமிழில் பிரபல சீரியலான சித்தி சீரியலின் கன்னட ரீமேக்கில் நடித்தார். தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு துஷ்யத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு தமிழ் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார். 

கடைசியாக உமா நடிப்பில் 'ரசிகர் மன்றம்' என்கிற படத்தில் நடித்திருந்தார். கடந்த 20 வருடங்களில் அவருக்கு எந்த பட வாய்ப்பும் இல்லை. இந்த நிலையில் தான் உமா சங்கரி தற்போது புற்றுநோயுடன் போராடி வருகிறார். அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. 

இதற்காக சிகிச்சையில் அவர் 2 ஆவது கட்ட கீமோ மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக சவாலாக இருந்ததாகவும் இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றை உமா சங்கரி வெளியிட்டிருக்கிறார். சவாலான நாட்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வதாகவும், தன் மீதான அன்பிற்கும் ஆதரவிற்கும் ரசிகர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ள அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நடிகை உமா சங்கரி.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278