Header Logo
Mogo Academy

சினிமா
கார் டிரைவரை இயக்குநராக்கிய யோகி பாபு!

Jul 16, 2026 - 10:23 AM -

0

கார் டிரைவரை இயக்குநராக்கிய யோகி பாபு!
Mobitel inner

சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற கனவோடு நுழைந்தவர் தான் ராஜ்மோகன். ஆரம்பத்தில் ‘ராஜபாட்டை’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், ‘யோகி’ திரைப்படத்தின் மூலமாக நடிகர் யோகி பாபுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். எனினும், சினிமா உலகம் நினைத்தது போல அத்தனை எளிதாக அவருக்குக் கைகூடவில்லை. 

சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் திரையுலகை விட்டே ராஜ்மோகன் தள்ளியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வறுமையும், குடும்ப சூழ்நிலையும் அவரை வாட்ட, வேறு வழியின்றி தனது வாழ்வாதாரத்திற்காக அவர் கார் டிரைவராக மாறினார். சினிமாவை மறந்து சக்கரங்களுடன் ஓடிக்கொண்டிருந்தது அவரது வாழ்க்கை. 

கொரோனா லாக்டவுன் சமயத்தில் வாழ்வே ஸ்தம்பித்துப் போயிருந்தபோது, ராஜ்மோகன் கார் ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

மறுமுனையில் பேசியது வேறு யாருமல்ல, முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு. "எங்கடா இருக்க?" என்று அவர் பாசத்துடன் கேட்க, ராஜ்மோகன் தான் இப்போது கார் டிரைவராக இருக்கும் கசப்பான உண்மையை உடைத்தார். 

ராஜ்மோகன் கார் டிரைவராக இருக்கும் கதையைக் கேட்ட யோகி பாபு வருத்தப்படவில்லை, மாறாக, அவரிடம் இருந்த திறமையை நம்பினார். "கதை ஏதாவது இருந்தா சொல்லுடா, நம்ம படம் பண்ணலாம்" என்று உடனடியாக வாய்ப்பளித்து அள்ளியணைத்துக் கொண்டார். 

பழைய உதவி இயக்குநரை மறக்காமல் தேடிக் கண்டுபிடித்து, அவருக்குப் புதிய வாழ்வு கொடுக்க முன்வந்த யோகி பாபுவின் பெருந்தன்மை திரையுலகை வியக்க வைத்தது. 

அப்படி யோகி பாபு கொடுத்த நம்பிக்கையில் உருவான திரைப்படம் தான் ‘அர்ஜுனன் பேர் பத்து’. இத்திரைப்படத்தின் மூலம் ராஜ்மோகன் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார். அதே நேரத்தில், இத்திரைப்படம் நடிகர் யோகி பாபுவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான 300 ஆவது திரைப்படமாக அமைந்துள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும். ஒரு கார் டிரைவரை இயக்குநராக்கிய இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara