Header Logo
Mogo Academy

வணிகம்
செலான் வங்கி, இரத்மலானையில் உள்ள செவிப்புலனற்றோருக்கான WP/PIL பாடசாலைக்கு நன்கொடை வழங்கி உள்ளடக்கிய கல்வியை ஆதரிக்கிறது

Jul 16, 2026 - 11:22 AM -

0

செலான் வங்கி, இரத்மலானையில் உள்ள செவிப்புலனற்றோருக்கான WP/PIL பாடசாலைக்கு நன்கொடை வழங்கி உள்ளடக்கிய கல்வியை ஆதரிக்கிறது
Mobitel inner

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், செலான் வங்கி, செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களின் கல்வி மற்றும் தொழிற்கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முகமாக 2026, மே 5 ஆம் திகதி அன்று இரத்மலானையில் உள்ள WP/PIL செவிப்புலனற்ற பாடசாலைக்கு திறன் பலகையொன்றையும் தச்சு வேலைக் கருவிகள் அடங்கிய தொகுப்பொன்றையும் நன்கொடையாக வழங்கியது. 

இந் நன்கொடையானது, நவீன கற்பித்தல் முறைகளை ஆதரிப்பதன் மூலமும் செயல்முறைத் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் மாணவர்களின் கற்றல் அனுபவங்களை குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் திறன் பலகை, வகுப்பறை அமர்வுகளை மேலும் ஈடுபாடு மிக்கதாக மாற்ற உதவும். தச்சுக் கருவிகள், மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கும் சுதந்திரமான வாழ்க்கைக்கும் பங்களிக்கும் முக்கிய தொழிற்திறன்களை வளர்க்க உதவும். 

இம் முன்னெடுப்பு, நிறுவன சமூகப் பொறுப்பு மீதான செலான் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இலங்கை முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி வாய்ப்புகளை வளர்ப்பதில் அதன் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது. அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், இவ்வாறான முன்னெடுப்புகள் ஊடாக மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதுடன் செயல்முறைத் திறன்களை வளர்ப்பதன் மூலம் தன்னம்பிக்கையையும் தன்னிறைவையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது. 

நன்கொடைக்கு நன்றிகளை தெரிவித்த, WP/PIL செவிப்புலனற்றோர் பாடசாலையின் அதிபர் M.அனுஷா I.பெர்னாண்டோ, இப் பங்களிப்பு மாணவர்களுக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். இவை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட கற்றல் சூழல்களில் மேலும் ஈடுபாடு மிக்க, திறன் சார்ந்த கல்வி வளர்ச்சியை எளிதாக்கும் எனக் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் செலான் வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சந்தைப்படுத்தல் பிரதம முகாமையாளர்- நளின் கருணாரத்ன, பிராந்திய முகாமையாளர், புறநகர் I - கங்கநாத் இந்திரபால மற்றும் நிலைத்தன்மைக்கான சிரேஷ்ட முகாமையாளர் - சன்றின் கோமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara