Header Logo
Mogo Academy

செய்திகள்
மருதமுனையில் கோர விபத்து - ஸ்தலத்திலேயே அரசு உத்தியோகத்தர் பலி

Jul 16, 2026 - 01:21 PM -

0

மருதமுனையில் கோர விபத்து - ஸ்தலத்திலேயே அரசு உத்தியோகத்தர் பலி
Mobitel inner

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற கோர விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த அரசு உத்தியோகத்தர், கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மட்டக்களப்பு, நொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்தவரும், வயது 36 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த ஓர் அரச உத்தியோகத்தராவார். 

இன்று காலை அவர் வழக்கம் போல் தனது கடமை நிமித்தம் பிரதேச செயலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியநீலாவணை பொலிஸார், சடலத்தை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

விபத்து குறித்து பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara