Header Logo
Mogo Academy

செய்திகள்
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எம்.பி அர்ச்சுனாவினால் அமைதியின்மை

Jul 16, 2026 - 01:50 PM -

0

 கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எம்.பி அர்ச்சுனாவினால் அமைதியின்மை
Mobitel inner

 

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். 

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், விவசாயத் துறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

அதன் போது, கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விவசாயச் செய்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார். 

குறித்த விடயம் தொடர்பில் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை மிக மோசமாக விமர்சித்தமையால் கூட்டத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது. 

இதன் காரணமாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர். 

அதிகாரிகள் இவ்வாறு பாதியிலேயே வெளியேறியதால், குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara