Header Logo
Mogo Academy

செய்திகள்
பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தடுப்பு காவல்

Jul 16, 2026 - 06:39 PM -

0

பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தடுப்பு காவல்
Mobitel inner

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரியுடன் போராடி, அவரது கடமை நேர துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பியோடிய நிலையில் கைதான தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (16) மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

நேற்று (15) பிற்பகல் தேவமொட்டாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

எவ்வாறாயினும், அவர் பொலிஸ் காவலில் இருந்த போது, பிரதான வீதியில் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முரண்பட்டு, அந்த அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துள்ளார். 

பின்னர் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் பிரயோகம் நடத்தி விட்டு, குறித்த துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் அவர் தப்பியோடியுள்ளார். 

தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக நேற்றிரவே பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டது. 

இதற்கமைய செயற்பட்ட நீர்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், திவுலப்பிட்டி பகுதியில் வைத்து சந்தேகநபரைக் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரின் வசம் இருந்த 31 கிராம் ஐஸ் போதைப்பொருள், கொள்ளையடிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி மற்றும் தப்பியோடப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara