Jul 17, 2026 - 05:32 AM -
0
நவகமுவ பொலிஸ் பிரிவின் வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 26 வயதுடைய நபரே இவ்வாறு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைத்துப்பாக்கி ஒன்றினை பயன்படுத்தியே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அவர்களைக் கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் விசேட விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
