Header Logo
Mogo Academy

விளையாட்டு
ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவுக்கு முக்கிய காரணம் இவரா?

Jul 17, 2026 - 03:09 PM -

0

ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவுக்கு முக்கிய காரணம் இவரா?
Mobitel inner

ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவில் இந்திய அணியின் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கபடுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவரும், நட்சத்திர தொடக்க வீரருமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 ஆவது மற்றும் கடைசி போட்டி வருகிற 19 ஆம் திகதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியே ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் நோக்கில் தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், இந்த முடிவில் இந்திய அணியின் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் முக்கிய பங்கு வகித்ததாகவும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கருத்தை விட தேர்வுக்குழுவே முக்கிய காரணமாக இருந்ததாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும், ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அல்லது ரோகித் சர்மா தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara