Header Logo
Mogo Academy

சினிமா
சூர்யாவின் சினிமா கெரியரில் புதிய உச்சம்!

Jul 17, 2026 - 04:23 PM -

0

சூர்யாவின் சினிமா கெரியரில் புதிய உச்சம்!
Mobitel inner

சூர்யாவின் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே 300 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகும் இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. 

சூர்யா நடிக்கும் 46 ஆவது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'பட்டாம்பூச்சி'யின் லிரிக்கல் வீடியோ வெளியாகி, பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் மற்றும் பவானி ஸ்ரீ எனப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரும் போஸ்டர்களும், இது ஒரு குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்பதை உணர்த்துகின்றன. 

படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகிறது. இதற்கிடையே, தற்போது, ​​இப்படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. 

அதாவது படம் வெளியாவதற்கு முன்பே, முன்பதிவு மூலம் 300 கோடி ரூபா வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் 300 கோடி ரூபா வசூலை குவித்த நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படம் ரிலீசுக்கு முன்பே 300 கோடி ரூபா வசூலை எட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara