Header Logo
Mogo Academy

செய்திகள்
மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு

Jul 18, 2026 - 07:57 AM -

0

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு
Mobitel inner

அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். 

வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அனர்த்தத்தின் பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார். 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara