Header Logo
Vallibel FD
Selan Bank
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (21.07.2026)!

Jul 21, 2026 - 09:22 AM

இன்றைய ராசிப்பலன் (21.07.2026)!
Mobitel Inner 1278

இன்று (21) துலாம் ராசியில் சந்திரன் நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்றுள்ளார், கடகத்தில் குரு - சூரியன், சிம்மத்தில் சுக்ரன் கேது ஆகிய கிரக சேர்க்கைகள் மூலம், குரு ஆதித்ய யோகம் கிடைக்கக் கூடிய நாளாக உள்ளது. கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று வளர்பிறை அஷ்டமி. 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால், தொழில் சவால்களை நிச்சயம் வெல்வீர்கள். இன்று உங்களுடைய நிதிநிலை வலுவடையும். உங்களுக்கு உதவி அல்லது சிறு வேலைகள் தேவைப்படும்போதெல்லாம், தற்போது உங்களுக்கு எதிராகச் செயல்படும் அதே நபர்களையே நீங்கள் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.எந்த ஒரு முடிவு அல்லது நடவடிக்கை எடுக்கும் முன் அதற்கான முக்கிய விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்களை கட்டுப்படுத்திய சேமிப்பை அதிகரிக்க வேண்டிய நாள். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் வேலையில் சில சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள். உங்களுடைய செலவுகளை சரியான முறையில் பட்ஜெட் போட்டு செய்யவும். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் இருக்கும் என்பதால், கடினமான மனநிலையில் இருப்பீர்கள். இன்று கலவையான பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் காலத்திற்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொண்டாலும், தேவைப்படும்போது இடர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்கிறீர்கள். முறையான ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பணம் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க உங்களுக்கு நேரம் கிடைக்கும். எந்த வித பண பரிவர்த்தனை விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் பெரிய நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பது மற்றும் உறுதிமொழிகளை கொடுக்க வேண்டாம். வரவிருக்கும் நாட்களை மனதில் கொண்டு, உங்கள் ஆடைகளையும் நகைகளையும் சரியான நேரத்தில் பராமரிக்க வேண்டும். குடும்பத்திலும் பணியிடத்திலும் முக்கிய ஆவணங்களை கவனமாக பராமரிக்கவும். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நிறைய திட்டங்கள், யோசனைகள் மனதில் வரும். உங்கள் வரவிருக்கும் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அதே வேளையில், உங்கள் வேலையை விரிவுபடுத்த தொடர்புகளையும் கூட்டணிகளையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.இன்று அலுவலக வேலை எதிர்பார்த்த விதத்தில் முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். வேலை பளு அதிகமாக இருக்கும் நாள். சரியான திட்டமிடல் மற்றும் எச்சரிக்கை உணர்வு தேவை. 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் வேலையுடன் சேர்த்து, காதல் மற்றும் உங்கள் உள் ஆசைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் வேலை நீங்கள் எதிர்பார்த்ததை விட சற்று மெதுவாக செய்து முடிப்பீர்கள். பணியிட சச்சரவுகளை இனிமையான பேச்சுக்கள் தீர்க்க முயற்சிக்கவும். உங்கள் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நாளாக இருக்கும். சில நேரங்களில், அதிகப்படியான கடின உழைப்பால் சலிப்பு ஏற்படும்போது, ​​நீங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் வாழ்க்கையில், படைப்பு முயற்சிகளை விட காதல், ரொமான்ஸ் மீதும், வேலைகளை முடிப்பதில் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் ஆகியவற்றுக்கு நீங்கள் முன்னுரிமை அளிப்பீர்கள். அதனால் எதிர்பார்த்த வேலையை முடிக்க முடியுமா என்ற மன சஞ்சலம் இருக்கும். நீங்கள் முதலில் படைப்பு முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால், உங்கள் குடும்பத்தின் ஆதரவைப் பெற்றிருப்பீர்கள். இப்போது, ​​இந்த நிலைமை உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் மீது கோபமடையக் கூட வழிவகுக்கலாம். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நலம் தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். வேலையில் உங்கள் பொறுப்பான அணுகுமுறை இன்று பணியிடத்தில் வெளிப்படும். இன்று உங்களுடைய நிதானமான சிந்தனை மற்றும் நல்ல ஆலோசனையை அலுவலகத்தில் பாராட்டை பெற்று தரும். பணியிடத்தில் வேலையாட்கள் அல்லது சக ஊழியர்களிடம் எந்தவித விவாதத்தின் ஈடுபட வேண்டாம். கடினமான சூழலை தவிர்க்க நிதானமான அணுகுமுறை தேவைப்படும். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கை பல மாற்றங்களையும், ஏற்ற இறக்கங்களையும் இந்த நேரிடும். இன்றும் கூட, உங்கள் நிலையற்ற தன்மையால், குடும்பம் அல்லது காதல் உறவில் அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் மனம் ஊசலாடும். எதிலும் மன உங்களுடைய மனம் உறுதியற்ற தன்மையுடன் இருக்கும். இதனால் சரியான முடிவு எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். என்று நீங்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்கலாம். அதே சமயம் உங்களுடைய பழைய கடன் அல்லது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று காதல் விஷயத்தில், உங்கள் வாழ்க்கை அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் சமநிலையை பராமரிக்கவும். பழைய தொடர்புகளால் லாபமும் மற்றும் புதிய கற்றலால் நன்மையும் ஏற்படும். உங்களில் பலர் இந்த நாட்களில் உங்கள் திருமண வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. சிலர் தங்கள் காதல் உறவுகளைத் திருமணத்தில் இணைக்கக் கூட முயற்சி செய்யலாம். பணியிடத்தில் குழுவாக செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படலாம். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் தொழில், திருமண வாழ்க்கை மற்றும் உங்கள் பெற்றோர், குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்தக்கூடும்.இன்று உங்கள் பணத்தை பாதுகாப்பான இடத்தில் சேமிப்பது அல்லது முதலீடு செய்வதில் கவனம் செலுத்தவும். அவசர முடிவுகளை தவிர்ப்பது அவசியம். நீங்கள் பணியில் இருந்தால், ஏதேனும் ஒரு நல்ல பணிக்காக விருது பெறலாம். உங்களுடைய வீட்டு சூழல் மிகவும் அமைதியாக இருக்கும், இது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் உங்கள் மனதை முழுமையாகக் கட்டுப்படுத்தி செயல்பட வேண்டிய நாள். ஒரு நண்பர் அல்லது அண்டை வீட்டுக்காரர் சொன்ன ஏதேனும் ஒரு விஷயம் உங்களை திடீரென கோபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இருப்பினும் அதை நிதானமாக யோசித்துப் பார்த்து அதில் உள்ள உண்மையை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் ஒழுக்கமான அணுகுமுறை உங்கள் சூழலை மேம்படுத்துவதோடு, உங்கள் மீதான மரியாதையையும் அதிகரிக்கும். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாழனின் உதவியுடன், நீங்கள் இப்போது உங்கள் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க புகழையும் அங்கீகாரத்தையும் பெறலாம். சிலருடன் நீங்கள் குழுவாக சேர்ந்து செயல்பட்டால் அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையில் நீங்கள் தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டிய நாள். அதன் மூலம், நீங்கள் முன்னேற்றத்தின் பெரும் உயரங்களை அடையக்கூடும். தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதும், இனிமையான பேச்சும் உங்களுக்கு நற்பெயர் பெற்றுத் தரும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278