Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சமூக வலைதளத்தில் தொடரும் தொல்லை!

Jul 21, 2026 - 10:28 AM

சமூக வலைதளத்தில் தொடரும் தொல்லை!
Mobitel Inner 1278

பிரபல கன்னட டி.வி. நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி. இவர் கன்னட 'பிக்பாஸ்' மூலம் பிரபலமானார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி, பெங்களூரு சஞ்சய் நகர் பொலிஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, 

சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக போலி கணக்குகள் மூலம் எனக்கு அவதூறான கருத்துகள் அனுப்புவது, இழிவுப்படுத்தும் செய்திகளை வெளியிடுவது என தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறேன். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற துன்புறுத்தலை எதிர்கொண்டேன். அப்போதும் இதுபற்றி சஞ்சய்நகர் பொலிஸில் புகார் அளித்தேன். 

அதன்பிறகு இதுபோன்ற தொல்லைகள் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் கடந்த 2 மாதங்களாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன். எனக்கு நன்கு அறிமுகமான நபர் ஒருவர் வேறொரு பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி தன்னை துன்புறுத்துவதாக சந்தேகம் உள்ளது. மன்னத் நகுல் என்பவரே சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து சஞ்சய்நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நடிகைகள் ரம்யா மற்றும் ருக்மினி வசந்த் உள்ளிட்ட நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் தொல்லை கொடுப்பது தொடர்பாக புகார் அளித்துள்ள போதிலும், தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278