Jul 21, 2026 - 11:18 AM -
0
ஐ.சி.சி 2025-2029 மகளிர் உலகக் கிண்ண செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இலங்கையுடன் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அந்த அணி பங்கேற்கும் மூன்று ஒருநாள் போட்டிகளும் எதிர்வரும் 23, 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இது தவிர, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியுடன் இந்த மாதம் 31, அடுத்த மாதம் 02 மற்றும் 04 ஆம் திகதிகளில் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 (T20) கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நேற்று இரவு 10.00 மணிக்கு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
