Jul 21, 2026 - 11:28 AM -
0
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை இரத்த சோகை.
நமது உடலில் இரத்தம் இல்லையென்றாலும் முகத்தின் அழகு குறையும்.
உடலில் இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும் போது உடல் சோர்வு, தலைச்சுற்றல், மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் நமது உடலுக்கு சேர்க்க வேண்டும்.
கீரை வகைகளில் முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி மிக அதிகளவில் உள்ளன. வாரத்தில் மூன்று நாட்கள் முருங்கைக் கீரை சூப் அல்லது பொரியல் சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும்.
பாலக்கீரை இதிலுள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து ரத்த சோகையை விரட்ட பெரிதும் உதவுகிறது.
இதில் இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை சீராக்கி ஹீமோகுளோபினை உயர்த்தும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் கூடும்.
இயற்கையாகவே இரத்தத்தை உற்பத்தி செய்வதில் பீட்ரூட் முதலிடத்தில் உள்ளது. இதிலுள்ள இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபைபர் உடலின் இரத்த நாளங்களைச் சுத்திகரிக்கின்றன. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மிக விரைவான பலனைத் தரும்.
கேரட் இதிலுள்ள பீட்டா - கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தி, இரத்த உற்பத்தியைத் தூண்டுகிறது.
இரவில் ஒரு கைப்பிடி கருப்பு உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு திராட்சையையும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை முற்றிலும் குணமாகும்.
உலர் அத்திப்பழம் இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாமிரச்சத்து ஹீமோகுளோபின் அளவை உடனே அதிகரிக்கச் செய்யும்.
எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் நாம் எவ்வளவு தான் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும், அதை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் 'சி' மிகவும் அவசியம்.
எனவே, உணவோடு எலுமிச்சை சாறு அல்லது நெல்லிக்காய் சேர்த்துக்கொள்வது ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிவகுக்கும்.
அதிகப்படியான இரும்புச்சத்து அசைவ உணவுகளில் ஆட்டு ஈரலில் தான் மிக அதிக அளவிலான 'ஹீம் இரும்புச்சத்து' உள்ளது. இதனை நம் உடல் எளிதாகவும் வேகமாகவும் உறிஞ்சிக் கொள்ளும்.
இதில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் புதிய இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கும். வாரத்திற்கு ஒருமுறை ஈரல் சாப்பிடுவது இரத்த சோகைக்குச் சிறந்த மருந்தாகும்.
பாதாம், முந்திரி மற்றும் பூசணி விதைகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து தாராளமாக நிறைந்துள்ளது.
மாலை நேர சிற்றுண்டி தினமும் மாலை நேரத்தில் ஒரு கைப்பிடி அளவு இந்த நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டு வந்தால், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதைத் தடுத்து ரத்த உற்பத்தியை அதிகரிக்கலாம்.
