Jul 21, 2026 - 11:46 AM -
0
'தி ஒடிசி' திரைப்படத்திற்கு அதிகப்படியான உழைப்பு தேவைப்பட்டதால், ஓய்வெடுக்க உள்ளதாக இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் அறிவித்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் உருவாகி வெளியான 'தி ஒடிசி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய இந்தப் படத்தில் மேட் டேமன், டாம் ஹாலண்ட், ஜெண்டயா, அன் ஹாத்வே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் உருவாக, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் உழைப்பை செலுத்தியதால், அடுத்த 3 ஆண்டுகள் ஓய்வில் இருக்க உள்ளதாக நோலன் தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு, அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திரையரங்குகளில் வெளியான 3 நாட்களில், 'தி ஒடிசி' திரைப்படம் 2 ஆயிரத்து 545 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில், 3 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நோலனின் டார்க் நைட், ஓப்பன்ஹெய்மர் வரிசையில் ஒடிஸ்ஸியும் இடம்பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.
கிரேக்க இலக்கியத்தில் தலைசிறந்த காவியமான ஹோமரைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஒடிஸ்ஸி. ஒடிஸ்ஸியஸ் மன்னனின் வெற்றிப் பயணத்தைக் குறிக்கும் இந்த 8 ஆம் நூற்றாண்டின் கதை 21 ஆம் நூற்றாண்டு ரசிகர்களையும் கட்டிப் போட்டிருக்கிறது எனும்படியாக உலகெங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
