Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
இளம் நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு!

Jul 22, 2026 - 01:14 PM

இளம் நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு!
Mobitel Inner 1278

ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் திரைப்படங்களான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' மற்றும் 'காட்ஸில்லா x காங்' தி நியூ எம்பயர் ஆகியவற்றில் 'ஜியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளி (செவித்திறன் அற்ற) இளம் நடிகை கெய்லி ஹாட்டில் (வயது 18) அமெரிக்காவில் நடந்த வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஃபிரடெரிக் கவுண்டி பகுதியில் இந்திய நேரப்படி அதிகாலை 2.50 மணியளவில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கெய்லி ஹாட்டில் பயணித்த ஹோண்டா அக்கார்ட் கார், எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த வடிகால் அமைப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 

காரை ஓட்டிச்சென்ற 19 வயது இளைஞர் மற்றும் மற்றொரு பயணியும் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், தீவிர காயமடைந்த கெய்லி ஹாட்டில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிகப்படியான வேகமே இந்த விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கெய்லி ஹாட்டிலின் குடும்பத்தினர் அனைவரும் செவித்திறன் குறைந்தவர்கள் என்பதால், அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில் அமெரிக்க சைகை மொழியில் முகநூலில் வெளியிட்ட வீடியோ பதிவில் தன் மகளின் மரணத்தை கண்ணீருடன் உறுதிப்படுத்தினார். 

"என் மகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. அவளுடன் கழித்த இந்த 18 ஆண்டுகள் எனக்கு மிகவும் பாக்கியமானது. ஆனால், இன்னும் கொஞ்ச காலம் அவர் எங்களுடன் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

மகளின் உடலை வாங்குவதற்காக மேரிலாண்ட் சென்று கொண்டிருக்கிறேன்." மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவரைத் தான் மன்னித்துவிட்டதாகவும், இந்தச் சம்பவத்துக்காக அவரது வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

2021 இல் வெளியான 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கெய்லி, 

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளமாகத் திகழ்ந்தார். இப்படத்தில் மாபெரும் கிங் காங் மிருகத்துடன் சைகை மொழியில் பேசி நட்பை வெளிப்படுத்தும் 'ஜியா' என்ற பழங்குடிச் சிறுமியின் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தது. 

2024 இல் வெளியான இதன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்காகச் சிறந்த இளம் நடிகருக்கான 'சாட்டர்ன் விருது' தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 

கெய்லியுடன் இணைந்த நடித்த பிரபல நடிகை மில்லி பாபி பிரவுன் , அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் ரெபெக்கா ஹால் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் தனக்கென தனிமுத்திரை பதித்த ஒரு திறமையாளரின் மறைவு சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278