Jul 22, 2026 - 04:47 PM -
0
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் அரசியலில் இறங்கிவிட்டார், இன்னொருவரான அஜித் கார் பந்தயத்தில் பிஸியாக உள்ளார்.
நாளை (23) விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதற்கான வேலைகள் எல்லாம் படு ஜோராக நடக்கிறது. இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் விஜய்யின் ஜனநாயகன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இதில் குட் பேட் அக்லி படம் மாஸ் வெற்றி, பட்டி தொட்டி எங்கும் கலக்கி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.
அஜித் கார் பந்தயங்களை முடித்துவிட்டு தனது 64 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார், இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்த ஆதிக்கிடம் அஜித்தின் அடுத்த படம் குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், அஜித்துடன் இணையும் புதிய படத்தின் அப்டேட் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
