Sep 22, 2026 - 10:01 AM

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு விடுதலையையும், மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலே நேற்று (21) மாலை மெழுகுதிரி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.
தன்னார்வ இளைஞர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





























