Header Logo
Mogo Academy

சினிமா
’மீசைய முறுக்கு 2' படத்தின் ரிலீஸ் திகதி!

Jul 22, 2026 - 05:14 PM -

0

’மீசைய முறுக்கு 2' படத்தின் ரிலீஸ் திகதி!
Mobitel inner

பிரபல ராப் பாடகர் ஹிப் ஹாப் ஆதி, 2015 இல் சுந்தர் சி இயக்கிய 'ஆம்பள' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

தொடர்சியாக `இன்று நேற்று நாளை', `தனி ஒருவன்', `அரண்மனை 2' எனப் பல படங்களில் இசையமைப்பளராக பணியாற்றியவர் 2017 ஆம் ஆண்டு `மீசைய முறுக்கு' படம் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். 

அதன்பிறகு `நட்பே துணை', `நான் சிரித்தால்', `சிவக்குமாரின் சபதம்', `அன்பறிவு', `வீரன்', `PT சார்', `கடைசி உலகப்போர்' போன்ற படங்களில் நடித்தார், இதில் இரு படங்களை (சிவக்குமாரின் சபதம், கடைசி உலகப்போர்) அவரே இயக்கினார். 

’மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக, படத்தின் இரண்டாம் பாகமான 'மீசைய முறுக்கு 2' எப்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பதை நாளை (23) மாலை 5 மணிக்கு அறிவிப்போம் என்று ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். 

'மீசைய முறுக்கு' படம் குறித்து ஆதியின் பதிவில், "இது வெறும் ஒரு கனவாகத் தொடங்கியது. ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது" என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 

முந்தைய பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்களை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

MOST READ

காணொளி
செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

Mobitel Upahara