Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ஜனநாயகன் சிறப்பு காட்சி ரத்து - ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Jul 23, 2026 - 06:40 AM

ஜனநாயகன் சிறப்பு காட்சி ரத்து - ரசிகர்களுக்கு அதிர்ச்சி
Mobitel Inner 1278

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 

பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

விஜய்யின் இறுதிப் படம் எனக் கூறப்படுவதால், உலகளவில் 3,500-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றி கழக (த.வெ.க.) தொண்டர்களும் திரையரங்குகளில் சிறப்பான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். 

பல இடங்களில் பேனர்கள், கட்-அவுட்கள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், புதுச்சேரியில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காலை 7 மணி சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

புதுச்சேரியில் மொத்தம் 13 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாக உள்ளது. 

இதில் 3 திரையரங்குகளுக்கு மட்டும் சிறப்புக் காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், பொதுமக்களுக்கு போதுமான அளவில் டிக்கெட் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், சிறப்புக் காட்சியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, காலை 10 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278