Header Logo
Mogo Academy

சினிமா
பொண்டாட்டி அப்படி ஆடுனா எந்த புருஷன் பார்த்துட்டு சும்மா இருப்பான்!

Jul 23, 2026 - 03:29 PM -

0

பொண்டாட்டி அப்படி ஆடுனா எந்த புருஷன் பார்த்துட்டு சும்மா இருப்பான்!
Mobitel inner

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய அசாத்திய நடிப்பால் டாப் நடிகையாக முத்திரை பதித்தவர் தான் நடிகை ஊர்வசி. தற்போது பல கோணங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். 

சமீபத்தில் அவரளித்த பேட்டியில், திரையில் கதாநாயகி அரைகுறையான ஆடையணிந்து சுற்றிலும் பல நடனக் கலைஞர்களுடன் நடனமாட, கதாநாயகனும் அவருடன் சேர்ந்து ஆடுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கணவருக்கு எப்படிப்பட்ட உணர்வு தோன்றும். 

தன்னுடைய மனைவி இப்படி அரைகுறையாக ஆடுகிறாலே என்ற எண்ணம் ஏற்படுமா? ஏற்படாதா? சாதாரண வாழ்க்கையில் ஒரு கணவன் தன்னுடைய மனைவியுடன் வெளியில் செல்லும்போது ஆடை கொஞ்சம் விலகிவிட்டாலே அந்த புருஷன் எவ்வளவு கோவப்படுவார், ஆனால் சினிமாவில் அந்த எண்ணம் வரவே வராது. சினிமா என்பது தற்போது வியாபாரத்தை மட்டுமே பார்த்தால் கவர்ச்சி என்பது தற்போதைய சூழலில் பெரிய விஷயமாக மாறிவிட்டது. 

அதிலும் அதிக பட்ஜெட் படங்களில், தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் கமர்சியல் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதேசமயம் மலையாளம், பெங்காலி மொழி படங்களில் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படைப்பாளர்களை முதன்மைபடுத்தும் படைப்புகளை வழங்குகிறார்கள். அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஹரிஹரன் போன்ற ஒரு இயக்குநரின் பெயரை சொல்லித்தான் அங்கு படங்கள் ஓடுகிறது. 

தென்னிந்தியாவில் இயக்குநர்கள் பெயரை சொல்லி எந்த படம் ஓடுகிறது, ஆனால் இங்கேயும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, கதைகளுக்கு முதன்மை தந்த காலக்கட்டம் இருந்தது. மகளிர் மட்டும் படத்தில் ஒரேவொரு வில்லனை வைத்து, மூன்று பெண்களை மட்டுமே நம்பி ஒரு தயாரிப்பாளர் படம் எடுத்தார். 

அந்த தயாரிப்பாளர் கமல்ஹாசன். உடலை காட்டாத அந்த மூன்று நடிகைகளை வைத்து படம் தயாரித்தது கமல்ஹாசனின் தைரியம் என்று நடிகை ஊர்வசி பகிர்ந்துள்ளார்.

MOST READ

காணொளி
யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

Mobitel Upahara