Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு!

Jul 24, 2026 - 06:43 AM

முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு!
Mobitel Inner 1278

தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது. 

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து உலகம் முழுவதும் நேற்று (23) வெளியானது. 

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் திரைப்பயணத்திற்கு மகுடம் சூட்டும் படமாகவும், அவரது இறுதித் திரைப்படமாகவும் வெளியாகும், இந்தப் படத்தை வரவேற்க ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய இரவே சென்னை நகரம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டது. 

நேற்று வெளியாகி உள்ள திரைப்படத்தை கடந்த 22 ஆம் திகதி இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். இரவு நேரம் என்பதையே மறக்கடிக்கும் வகையில் ரசிகர்களின் ஆரவாரம், மேளதாளங்கள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு திருவிழா சூழல் நிலவியது. 

அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தனது திரைப்பயணத்தை 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் நிறைவு செய்கிறார் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர். 

இதனிடையே, தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது. 

1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடிப்பில் உருவான 'மீனவ நண்பன்' (1977 அக்டோபர்) மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' (1978) ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. 

அதேபோல், தற்போதைய தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278