Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
இந்தியில் தமன்னாவிடம் உடலை வர்ணித்து பேட்டி!

Jul 24, 2026 - 09:19 AM

இந்தியில் தமன்னாவிடம் உடலை வர்ணித்து பேட்டி!
Mobitel Inner 1278

நடிகை தமன்னா சமீபத்தில் நடித்த ’ஆஜ் கி ராத்’ பாடல் இந்தியா முழுவதும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அப்பாடலில் தமன்னாவின் நடனமும் கிளாமர் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பலரும் சோசியல் மீடியாகளில் அப்பாடலை கொண்டாடிய நிலையில் நடிகர் அன்னு கபூரும் அப்படம் குறித்து பேசியிருந்தார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த பாடலை பார்த்தப்பின் தமன்னாவின் ரசிகனாகவே மாறிவிட்டேன். அவரது அழகையும் உடலமைப்பும் பார்த்து வியந்துபோனேன் என்று கூறியிருந்தார். அதோடுமட்டுமல்லாமல் தமன்னாவை பால் போன்ற மேனி கொண்டவர் என இந்தியில் சரிச்சைக்குரியபடி பேசினார். 

மேலும் இந்த பாடலை பார்த்த இளைஞர்களுக்கு தூக்கம் வரவில்லை என்று தமன்னா முன்பு கூறிய கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அன்னு கபூர், அவரது பால் போன்ற மேனியும் முகமும் இளைஞர்கள் நிம்மதியாக தூங்க உதவுகிறது. 

அது ஒரு நல்ல விஷயம், அவருடைய அனைத்து ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றட்டும், என்னுடைய ஆசிகள் எப்போது அவருக்கு உண்டு என்று கூறியிருந்தார். இது பலருக்கும் பிடிக்காமல் போக, உங்களுக்கு மகள்களும் பேத்திகளும் இருக்கிறார்கள். ஒரு நடிகையை பற்றி இப்படியா பேசுவீர்கள் என்று விளாசினர். 

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அன்னு கபூர், 300 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வாழ்ந்ததன் தாக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒருவரை பாராட்டினால் அது நாகரிகமாக தெரிகிறது. அதே கருத்தை இந்தியில் சொன்னால் மட்டும் தவறாக பார்க்கிறார்கள். 

அரசியல் ரீதியாக நமக்கு 1947 இல் சுதந்திரம் கிடைத்தது, ஆனால் மனரீதியாக இன்னும் ஆங்கிலேயர்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. 

தமன்னாவை ஆங்கிலத்தில் மில்க் ப்யூட்டி அல்லது மில்கி பாடி என்று சொன்னால் யாரும் கேள்வி கேட்பதில்லை, ஆனால் அதையே இந்தியில் தூதியா பதன் என்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். 

நான் பேசிய வார்த்தைகள் யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமன்னா எப்போதும் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278