Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
குழந்தை பிறக்க 1,000 ஊசிக்கு மேல் போட்டுக்கொண்டேன்!

Jul 24, 2026 - 10:53 AM

குழந்தை பிறக்க 1,000 ஊசிக்கு மேல் போட்டுக்கொண்டேன்!
Mobitel Inner 1278

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்குப்பின் 2015 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போராட்டத்திற்குப்பின் பிறந்தது. தன்னுடைய பெண் குழந்தை எப்படி பிறந்தது குறித்து ரியாலிட்டி ஷோ ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அதில் நான் 5 முறை IVF சிகிச்சை செய்துகொண்டேன். அதைப்பற்றி நான் மிகவும் வெளிப்படையாக பேசுவேன், அதை செய்யும்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். IVF சிகிச்சை என்பது மிகவும் கடினமான ஒரு செயல்முறை. முதல் இரண்டு முறை கடினமாக இருக்கும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது முறை சரியாகிவிடும். வைத்தியசாலைக்கு சென்று அந்த ஊசிகலை போட்டுக் கொள்வதற்கே நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இது மிகவும் வேதனையான ஒரு செயல்முறை. 

நான் என் வாழ்க்கையில் பிற்பகுதியில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் அறிவுரை என்னவென்றால், தயவு செய்து 35 வயதுக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நான் தாமதமாக குழந்தை பெற்றுக்க்கொண்டது நிச்சயமாக உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை பாதித்தது. நன் அப்போது இருந்ததுக்கும் இப்போது இருப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. மனதளவில் நான் மிகவும் வலிமையானவள். 

உடல்ரீதியாக 1,000 இற்கும் மேற்பட்ட ஊசிகள் எடுத்துக் கொண்டேன். இதனால் உடல் மாறிவிட்டது. உங்கள் கர்ப்பம் பாசிட்டிவாக இருந்தால் அவர்கள் நிறுத்துக்கிறார்கள். நான் IVF சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள 5 முறை முயற்சித்தேன். இதில் இரு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. 5 ஆவது முறையாகத்தான் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது என்று கூறியிருக்கிறார் தேஜஸ்வினி.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278