Jul 26, 2026 - 11:07 AM -
0
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.
மாபெரும் போராட்டத்திற்கு பின், பல தடைகளை தாண்டி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் மறுபுறம் கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீது சொல்லப்பட்டு வருகின்றன.
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட வெளியாகியுள்ள ஜனநாயகன் வசூலில் சற்று தடுமாறினாலும், லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு இவ்வளவு வசூலா என்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார் விஜய். இதுதான் அவருடைய உச்ச நட்சத்திர அந்தஸ்தை காட்டுகிறது.
இந்த நிலையில், 3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் 165 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.
