Jul 27, 2026 - 07:10 PM -
0
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதாக வரையறுக்கப்பட்டுள்ள முறையே 63 மற்றும் 65 வயது எல்லையை, அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் வீதம் நீடிப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
தற்போது உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 08 நீதியரசர் பதவிகள் வெற்றிடமாகவுள்ளதாகவும், இந்தப் வெற்றிடங்களை நிரப்புவதை ஜனாதிபதி நீண்டகாலமாகத் தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
