Jul 27, 2026 - 09:32 PM -
0
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த பதுளை, சொரணாதோட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள துன்ஹிந்த நீர்வீழ்ச்சி வளாகத்தில் புதிய பார்வையாளர் மையம் ஒன்றைக் நிர்மாணிப்பதற்கான திட்டம் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
50 வருடங்களுக்கும் மேலான பழமையான, தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் பார்வையாளர் மேடைக்கு பதிலாக அமைக்கப்படும் இந்தப் புதிய மையத்திற்காக ஊவா மாகாண சுற்றுலா அமைச்சினால் 200 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தரமிக்க பார்வையிடல் அனுபவத்தையும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
