Jul 30, 2026 - 03:30 PM -
0
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படம் ‘ராக்கா’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் கதை, புராண வேத காலம் மற்றும் இப்போதைய காலம் என 2 வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. நவீன காலக்கட்டத்தில் மிருணாள் தாக்குர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். புராண வேத காலகட்டத்தில் தீபிகா படுகோன், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் நடிக்கின்றனர்.
இந்தி நடிகர் ஷாருக் கான் இப்படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அவர் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படம் 2 பாகமாக உருவாகிறது என்றும் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடப்பது போல உருவாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
