Header Logo
SLIC
Rhythams of Lanka
பல்சுவை
தமிழ்நாட்டிற்கு நீரை திறக்க வேண்டும்!

Jul 30, 2026 - 05:56 PM

தமிழ்நாட்டிற்கு நீரை திறக்க வேண்டும்!
Mobitel inner

தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்கள் நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதற்கு கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. 

இது மட்டுமின்றி மேகதாது அணை பிரச்சனையையும் கர்நாடகா அரசு எடுத்தது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். மேலும், காவிரி நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் நீர் இன்றி வறட்சி ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. 

இந்தச் சூழலில் இன்று டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்தபடி 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதே சமயம், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் டெல்லியில் இருந்துவருகிறார். இந்த உத்தரவை அடுத்து, கர்நாடகா பிரதிநிதிகள் முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara