Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
'லக்கி பாஸ்கர் 2' நிச்சயம் உருவாகும்!

Jul 31, 2026 - 11:37 AM

'லக்கி பாஸ்கர் 2' நிச்சயம் உருவாகும்!
Mobitel Inner 1278

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில், மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. 

'லக்கி பாஸ்கர்' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், இயக்குநர் வெங்கி அட்லூரி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "'லக்கி பாஸ்கர் 2' திரைப்படம் நிச்சயம் உருவாகும். ஆனால் அதற்காக ரசிகர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இரண்டு திரைப்படங்களை முதலில் நிறைவு செய்ய வேண்டியுள்ளது" என்றார். 

மேலும், "முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதனால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே அதன் பணிகளைத் தொடங்க உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்கிடையில், இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278