Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்!

Jul 31, 2026 - 12:08 PM

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்!
Mobitel Inner 1278

இசையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருந்த பின்னணி பாடகி ஜமுனா ராணி நேற்று (30) காலமானார். இவரது மறைவால் தென்னிந்திய இசை உலகம் சிறந்த ஒரு குரலை இழந்துள்ளது. 

தென்னிந்திய திரையுலகின் மூத்த பின்னணிப் பாடகியான ஜமுனா ராணி (வயது 88), நேற்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவு தென்னிந்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் நடைபெற உள்ளது. 

1938 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ஜமுனா ராணி, தனது 7 ஆவது வயதிலேயே 'தியாகய்யா' திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். 

தமிழில் 1952 ஆம் ஆண்டு வெளியான 'கல்யாணி' திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான ஜமுனா ராணி, 'காளை வயசு கட்டான சைசு', 'பாட்டொன்று கேட்டேன்', 'சின்னச் சின்ன சிட்டு', 'காவேரி தாயே', 'யாரடி நீ மோகினி', 'குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே', 'மாமா மாமா' உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278