Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சைபர் மோசடியில் சிக்கிய பாலிவுட் நடிகை!

Jul 31, 2026 - 12:26 PM

சைபர் மோசடியில் சிக்கிய பாலிவுட் நடிகை!
Mobitel Inner 1278

பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் நடிகை கீர்த்தி குல்ஹாரி, 'உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்', 'மிஷன் மங்கல்', 'போர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பிரபலமானவர். தற்போது அவர் சைபர் மோசடியில் சிக்கி ரூபா 2.43 லட்சத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 24 ஆம் திகதி இரவு, அந்தேரி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்று கொண்டிருந்த போது, கீர்த்தி குல்ஹாரியின் தொலைபேசிக்கு வங்கியிலிருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது கடன் அட்டையைப் பயன்படுத்தி 'ஏரோமெக்சிகோ ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு 2,525 அமெரிக்க டொலர் வெளிநாட்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி குல்ஹாரி, உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு விவரங்களை உறுதிப்படுத்தினார். அப்போது, அவரது கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு தனித்தனி வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூபா 2.43 லட்சத்திற்கும் அதிகமான தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, மேலும் பணப்பரிவர்த்தனை நடைபெறாமல் தடுக்க வங்கி அதிகாரிகள் அவரது கடன் அட்டையை உடனடியாக முடக்கினர். 

இந்த சம்பவம் தொடர்பாக கீர்த்தி குல்ஹாரி மும்பை அம்போலி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தனது கடன் அட்டை எண், ரகசிய எண் அல்லது ஓ.டி.பி. உள்ளிட்ட எந்த ரகசிய தகவலையும் அவர் யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, மும்பை சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278