Jul 31, 2026 - 01:21 PM
விஜய்யின் ஜன நாயகன் இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகி இருந்தால் இந்நேரம் அமேசான் பிரைம் ஓடிடியிலேயே அந்த படம் பழைய படமாக மாறியிருக்கும். ஆனால், படம் வெளியாக பல தடைகள் உருவாகியதும் மொத்தமும் லீக் ஆன நிலையில், அமேசான் பிரைம் ஜன நாயகன் படத்தை ஓடிடியில் திரையிடும் முடிவை கைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 110 கோடி ரூபாயை விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனுக்கு கொடுக்க அமேசான் பிரைம் நிறுவனம் முன் வந்தது. ஆனால், பல மாதங்களாக படம் ரிலீஸ் ஆகாத நிலையில், அந்த டீல் வாபஸ் பெறப்பட்டது என்கின்றனர்.
தற்போது ஜீ5 ஓடிடி தளம் தான் ஜன நாயகன் படத்தை சுமார் 50 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை அது தொடர்பாகவும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தளபதி வெற்றிக் கொண்டானாக விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் உலகளவில் 260 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே 300 கோடி வசூலை ஜன நாயகன் கடக்கும் என்கின்றனர்.
இந்த வாரமும் அடுத்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிதாக படங்கள் வெளியாகாத நிலையில், ஜன நாயகன் நின்று ஓடும் என்கின்றனர்.
ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வெளியான நிலையில், ஓடிடியில் படம் எப்போது வரும் என்றும் வீட்டில் உள்ள குட்டீஸ்கள் எல்லாம் விஜய் படத்தை பார்க்க வேண்டும் என வெறித்தனமாக காத்திருக்கும் சூழலில் ஆகஸ்ட் 14 ஆம் திகதி அதிகபட்சமாக ஜன நாயகன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜீ5 ஓடிடி தளத்தில் ஜன நாயகன் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
ஆகஸ்ட் 14 ஆம் திகதி மிஸ் ஆனால், ஆகஸ்ட் 20 அல்லது 21 ஆம் திகதி வெளியாகி விடும் என்கின்றனர். கேவிஎன் தயாரிப்பில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஓடிடியில் ஜன நாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

