Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?

Jul 31, 2026 - 01:39 PM

இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
Mobitel Inner 1278

வீட்டில் உள்ள பெரியவர்கள் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன, இது மூடநம்பிக்கையா அல்லது நடைமுறை காரணமா என்பதைப் பற்றி பார்க்கலாம். 

சிலர் இதை மூடநம்பிக்கை என்று கூறினாலும், பழங்காலத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் நகம் வெட்டும்போது காயம் ஏற்படும் அபாயம் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. 

முற்காலங்களில் மின்சார விளக்குகள் இல்லாததால், எண்ணெய் விளக்கு போன்ற மங்கலான வெளிச்சத்தில்தான் இரவில் நகம் வெட்ட வேண்டியிருந்தது. இதனால் தவறுதலாக விரல்களில் காயம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. 

மேலும், நகத் துண்டுகள் தரை, படுக்கை அல்லது சோஃபாவில் விழுந்தால் அழுக்கு மற்றும் கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உணவு தயாரிக்கும் அல்லது சாப்பிடும் இடங்களில் நகம் வெட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. 

படுக்கை அல்லது சோஃபாவில் அமர்ந்து நகம் வெட்டும்போது, நகத் துண்டுகள் துணி அல்லது போர்வையில் விழக்கூடும். எனவே, நகம் வெட்டும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். 

இரவில் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மிகம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. பழங்கால பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளே இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். 

எப்போது நகம் வெட்டலாம்? நல்ல வெளிச்சம் இருக்கும் நேரத்தில் நகம் வெட்டுவது பாதுகாப்பானது. முன்பும், பிறகும் கைகளை சுத்தம் செய்து, காகிதம் அல்லது துணி விரித்து, நெயில் கிளிப்பர் பயன்படுத்தி நகங்களை வெட்டுவது நல்லது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278