Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
விஜய்யின் 'ஜனநாயகன்' பட காட்சி இரத்து!

Jul 31, 2026 - 02:03 PM

விஜய்யின் 'ஜனநாயகன்' பட காட்சி இரத்து!
Mobitel Inner 1278

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் கர்நாடகத்துக்கு எதிராக செயல்படும் தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை திரையிடக் கூடாது என கோஷமிட்டனர். 

காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கவேண்டும் என்று கடந்த 28 ஆம் திகதி உத்தரவிட்டது. 

இதை கண்டித்தும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 4 ஆவது நாளாக இன்று (31) மண்டியா, மைசூரு, பெங்களூரு உள்பட பல இடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சாம்ராஜ்நாகரில் உள்ள பசவேஸ்வரா திரையரங்கில் இன்று ஜனநாயகன் படம் திரையிடப்பட இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தன. இதனால், விஜய்யின் ஜனநாயகன் பட காட்சி இரத்து செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று (30) மண்டியா டவுனில் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள குருஸ்ரீ தியேட்டரை முற்று கையிட்டு விஜய்சேனா என்ற கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

அப்போது போராட்டக்காரர்கள், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். மேலும் கர்நாடகம் அரசு எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணியக் கூடாது. 

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கோஷமிட்டனர். அதன்பிறகு போராட்டக்காரர்கள், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிராக செயல்படும் தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை திரையிடக் கூடாது என கோஷமிட்டனர். 

அந்த சமயத்தில் தியேட்டரில் காலை 10 மணி காட்சி திரையிடப்பட்டு இருந்தது. இதையடுத்து போராட்டக்காரர்களுடன், தியேட்டர் நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர். 

போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று 'ஜனநாயகன்' படத்தை உடனே நிறுத்துவதாக தியேட்டர் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி 'ஜனநாயகன்' படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278