Header Logo
சினிமா
‘துரோகம்’ யாருக்கு நடக்கவில்லை?

Jul 31, 2026 - 03:28 PM

‘துரோகம்’ யாருக்கு நடக்கவில்லை?
Mobitel inner

பலராம்கிருஷ்ணா இயக்கத்தில் கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘நிறம்’. படத்தில் கதாநாயகனாக முகேன்ராவ் நடித்துள்ளார். மேலும் பிரீத்தி அஸ்ரானி, தன்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். 

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இசையமைப்பாளர் டி.இமான் பேசியதாவது, 

துரோகம் என்பது யாருக்குத்தான் நடக்காமல் இருக்கிறது. அது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் நடைபெறக் கூடிய விஷயம் தான். 

தமிழ் திரைத்துறை சார்ந்தவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து விருது பெறும் போது அதை நம் மாநிலத்தின் பெருமையாக கருத வேண்டும் என அவர் பேசினார். 

இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசியதாவது, 

இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நிறைவேறிய தருணம். பல வருடங்களாக நான் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். “நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். 

அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து. இது ஒரு கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. 

நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara