Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ஸ்பைடர்மேன் 2 நாட்களில் 2600 கோடி வசூல்

Aug 1, 2026 - 04:47 PM

ஸ்பைடர்மேன் 2 நாட்களில் 2600 கோடி வசூல்
Mobitel Inner 1278

‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ படம் இரண்டு நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 31ம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. 

இதில் டாம் ஹொலண்ட் கதாநாயகனாகவும், ஜெண்டாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. 

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்பட வரிசையில் நான்காவது படமாக வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர். 

புதிய எதிரிகள், விறுவிறுப்பான அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் உலகம் முழுவதும் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

வெளியாகிய முதல் நாளிலேயே ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.72 கோடி மொத்த வசூலைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. 

இதன்மூலம், இதுவரை இந்தியாவில் ஹொலிவுட் திரைப்படங்களில் அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை வைத்திருந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 

முதல் நாளிலேயே இந்திய வசூலில் புதிய உச்சத்தை எட்டியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ இந்திய திரையரங்கு வரலாற்றில் ஹொலிவுட் திரைப்படங்களின் முதல் நாள் வசூலில் புதிய மைல்கல்லை படைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ படம் இரண்டு நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் இரண்டு நாட்களில் ரூ. 131 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278