Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
25ஆவது வருடமாக கதிர்காமம் கிரி விகாரை மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தை ஒளியூட்டும் சுதேசி கொஹொம்ப; பிரதேச மாணவர்களின் கல்விக்கும் உதவி

Aug 3, 2026 - 10:44 AM

25ஆவது வருடமாக கதிர்காமம் கிரி விகாரை மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தை ஒளியூட்டும் சுதேசி கொஹொம்ப; பிரதேச மாணவர்களின் கல்விக்கும் உதவி
Mobitel Inner 1278

2026 எசல பௌர்ணமி தினத்தையிட்டு, இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி விகாரை மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை, மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம் ஒளிரச் செய்தது. ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜை’ திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

2026 ஜூலை 15ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் இந்நிகழ்விற்கு தொடர்ச்சியாக 25ஆவது வருடமாக சுதேசி நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. 

இது குறித்து, சுதேசி நிறுவனத் தலைவி அமரி விஜயவர்தன தெரிவிக்கையில், இலங்கைக்கு சொந்தமான தொழிற்சாலை எனும் வகையில், இவ்வாறான வருடாந்த ‘ஆலோக பூஜா’ போன்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பதை தாம் கடமையாக கருதுவதாக குறிப்பிட்டார். 

அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதனையும் அடிப்படையாகக் கொண்டு, சுதேசி நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை ஒளியூட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஓளியூட்டும் நிகழ்வுகளைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையான வண்ணமயமான கலாசாரப் போட்டிகளும் இடம்பெற்றன. 

“சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய” நிகழ்வின் 25 ஆண்டுகளை முன்னிட்டு, கிரி விகாரை மகா சங்கத்தினருக்குத் தானம் வழங்குதல் மற்றும் கதிர்காமப் பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்விக்கான டெப் கணனிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும், கதிர்காம கிரி விகாரை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்த தேரரினால், 25 ஆண்டுகால ஆலோக பூஜைக்கான சேவை கருதி சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமரி விஜேவர்தனவை பாராட்டி விசேட விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

மகாவம்சத்தின் படி, புத்த பெருமான் இலங்கைக்கான தனது மூன்றாவது விஜயத்தின் போது, கதிர்காமம் கிஹிரி உயனவிற்கு தர்மத்தை போதிப்பதற்காக விஜயம் செய்ததன் நினைவாக மகாநாக மன்னனால் கிரி விகாரை கட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதாகச் செய்த சபதத்தை நிறைவேற்றும் வகையில் கதிர்காமம் தேவாலயம் துட்டகைமுனு மன்னனால் நிர்மாணிக்கப்பட்டது. கதிர்காம கடவுள், இலங்கையில் மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்வேறு இன, மதங்களைச் சேர்ந்த மக்களால் வழிபடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

புனித தந்தம் வைத்து பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய ரஜமஹா விகாரையின் ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் பழங்கால சுவரோவியங்கள், சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமரி விஜயவர்தனவினால் 2013 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டன. 

1927 இல் களனி ரஜ மகா விகாரையின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்த ஹெலனா விஜயவர்தன லமாதெனி என்பவரின் பேத்தியின் மகளே திருமதி அமரி விஜயவர்தன ஆவார். 

அத்துடன், தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயம், அலுத் நுவர தெடிமுண்ட தேவாலாயம், கண்டி ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், சப்ரகமுவ மகா சமன் தேவாலயம், ரெதிகம ரிதி விகாரை, லங்கா திலக ரஜ மகா விகாரை, தெரணியகல சமன் தேவாலயம், சங்கபாலி ரஜ மகா விகாரை, கொலம்பகம ரஜ மகா விகாரை, தம்பதெனிய ரஜ மகா விகாரை, அத்தனகல்ல ரஜ மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும் சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது. 

இலங்கை நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. சுதேசி கொஹொம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. 

நாடளாவிய ரீதியிலான வருடாந்த விகாரை ஒளியூட்டும் விழாவான ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’, வேம்பு மரக்கன்றுகள் நடும் ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய’, வரட்சியான பிரதேச சமூகங்கள், பாடசாலைகள் மற்றும் விகாரைகளுக்கு நீர் தாங்கிகளை நன்கொடையாக வழங்கும் ‘சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காரய’, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான குழந்தை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்களை வழங்கும் ‘சுதேசி கொஹொம்ப பேபி மாத்ரு சத்காரய’ போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாக குறிப்பிடலாம். 

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசியாகிய நாம் எமது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையாகக் கொண்டது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்கு துன்புறுத்தலற்றவை. சுதேசி கொஹொம்ப மற்றும் ராணி சந்தனம், கொஹொம்ப பேபி ஆகியன இங்கிலாந்திலுள்ள Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவையாகும். இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ளவும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். சுதேசி தொழிற்சாலை எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேசி, கடந்த 85 வருடங்களில் தொழில்துறையில் பல முன்னோடிச் சாதனைகளைத் தனது பெயரில் பதிவு செய்துள்ளது. 

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் நிறுவப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேசி நிறுவனம், இலங்கையில் முதலிடத்திலுள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ‘ராணி சந்தனம்’ ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 - 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் அவை தயாரிக்கப்படுகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
07
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM


காணொளி
அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

Mobitel 1278