Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
புதிய Toyota Hilux மற்றும் Toyota RAV4 2026 வாகனங்களை “Unlocked” நிகழ்வில் அறிமுகப்படுத்திய Toyota Lanka; இலங்கையின் வாகனத் துறையில் ஒரு புதிய அத்தியா

Aug 3, 2026 - 01:41 PM

புதிய Toyota Hilux மற்றும் Toyota RAV4 2026 வாகனங்களை “Unlocked” நிகழ்வில் அறிமுகப்படுத்திய Toyota Lanka; இலங்கையின் வாகனத் துறையில் ஒரு புதிய அத்தியா
Mobitel Inner 1278

இலங்கையில் Toyota வாகனங்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான Toyota Lanka நிறுவனம், வத்தளையில் அமைந்துள்ள தமது Toyota Plaza காட்சிறையில் இடம்பெற்ற Unlocked எனும் விசேட நிகழ்வில் 2006 ஆம் ஆண்டிற்கான புதிய Toyota Hilux மற்றும் புதிய Toyota RAV4 வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வணிகக் கூட்டாளர்கள், துறைசார் பங்காளரர்கள், வாடிக்கையாளர்கள், ஊடகப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வானது, இலங்கை வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்துத் தீர்வுகளை வழங்கும் Toyota Lanka நிறுவனத்தின் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. 

மேம்பட்ட வாகன தொழில்நுட்பம், ஒப்பிட முடியாத பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த நம்பிக்கைக்குரிய தன்மைகள் கொண்ட சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Toyota வாகனங்களை அறிமுகப்படுத்துவதிலும், இலங்கையின் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் Toyota Lanka நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த அறிமுகம் பிரதிபலிக்கிறது. Toyota Hilux மற்றும் Toyota RAV4 ஆகிய வாகனங்களின் வருகையானது, செயல்திறன் மற்றும் நம்பிக்கைக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற இரண்டு முக்கியத்துவமான மற்றும் புத்தாக்கமான மாதிரிகள் மூலம் Toyota Lanka நிறுவனத்தின் தயாரிப்புப் பட்டியலை மேலும் வலுப்படுத்துகிறது. 

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வாகனத் துறையில் முன்னணி வகித்து வரும் Toyota Lanka நிறுவனம், 3 மில்லியனுக்கும் அதிகமான Toyota உயர்தர சேவைகளை வழங்கியுள்ளதுடன், 200 பில்லியனுக்கும் அதிகமான அசல் Toyota உதிரிப்பாகங்களை விநியோகித்துள்ளது. வெறுமனே வாகன விற்பனையை மாத்திரம் மேற்கொள்ளாது, அதற்கு அப்பால் நாட்டின் நம்பிக்கைக்குரிய போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலித் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகவும் அது உருவெடுத்துள்ளது. Toyota வர்த்தக நாமத்தின் தரம், நீடித்துழைக்கும் தன்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு (Quality, Durability, Reliability, Safety - QDRS) ஆகிய அடிப்படைப் பண்புகளின் வழிகாட்டலின் கீழ், பயணிகள் வாகனங்கள் முதல் வர்த்தக வாகனங்கள் வரையிலான பரந்த அளவிலான தயாரிப்புகளுடன் பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது. 

Toyota Hilux மற்றும் Toyota RAV4 ஆகிய வாகனங்களின் அறிமுகத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது, Toyota வர்த்தகநாமத்தின் புகழ்பெற்ற நம்பகத் தன்மையையும், இலங்கை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட அதிநவீன கண்டுபிடிப்புகளையும் நேரடியாக அனுபவிக்கும் சிறந்த வாய்ப்பை பங்காளர்களுக்கு வழங்கியது. இரு வாகன மாதிரிகளும் நாட்டின் பல்வேறுபட்ட புவியியல் மற்றும் வாகனம் செலுத்தும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு வெப்ப வலய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு, ஒப்பிட முடியாத செயல்திறன், பாதுகாப்பு மற்றும் பல்துறைப் பயன்பாட்டை வழங்குகின்றன. 

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் SUV மாதிரியான RAV4 வாகனம், நவீன வசதி, அதிநவீன புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் அன்றாட விடயங்களுக்கான நடைமுறை ரீதியான பயன்பாட்டுக்கு ஏற்றதாக அமைகிறது. அதேவேளையில் Hilux வாகனமானது, வலிமை, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் சிறந்த செயல்திறன் தொடர்பில் Toyota நிறுவனம் கொண்டுள்ள புகழ்பெற்ற பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தி, வர்த்தக ரீதியிலான தேவைகளுக்கான நம்பிக்கையான தெரிவாக அமைகிறது. 

Unlocked நிகழ்வானது, Toyota நிறுவனத்தின் சமீபத்திய வாகனத் தொழில்நுட்பங்கள், புத்தாக்கமான வடிவமைப்புத் தத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அம்சங்களை பார்வையாளர்கள் நேரடியாக அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்கியது. Hilux மற்றும் RAV4 2026 வாகனங்களின் அறிமுகத்திற்கு அப்பால், பயணிகள் வாகனங்கள் முதல் வர்த்தக வாகனங்கள் வரையிலும், போக்குவரத்துத் தீர்வுகள் முதல் பொருட்கள் கையாளல் தீர்வுகள் (logistics solutions) வரையிலும் விரிவடைந்துள்ள Toyota Lanka நிறுவனத்தின் பன்முகத்தன்மை கொண்ட தயாரிப்பு வகைகளை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது. சமூகத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையையும் அமைதியையும் அளிக்கும் நிலைபேறான போக்குவரத்துத் தீர்வுகள் மூலம் ‘பயணத்தின் மகிழ்ச்சி அனைவருக்கும்’ (Mobility Happiness for All) எனும் Toyota நிறுவனத்தின் உலகளாவிய இலக்குடன் இந்த அறிமுகம் ஒத்துச் செல்கிறது. 

நாடு முழுவதிலும் Toyota Lanka நிறுவனத்தின் விரிவாக்கமானது இந்த அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. நாடு முழுவதும் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள 20 இற்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் Toyota வர்த்தகநாமத்தின் நம்பிக்கையான விற்பனை, சேவை, அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். தமது நீண்டகால வளர்ச்சியின் மூலோபாயத்தின் ஒரு அங்கமாக, Toyota Lanka 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது கிளைகளின் எண்ணிக்கையை 30 இற்கும் அதிகமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த Toyota தரநிலைகளை வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதுடன், இலங்கை முழுவதும் அதனை அணுகுவதற்கான தன்மையையும், வாகன உரிமையை பெறுவதற்கான நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது. 

சிறந்த சேவைக்கான Toyota Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியான அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்துள்ளது. இந்நிறுவனம் Toyota Motor Asia Pacific நிறுவனத்திடமிருந்து அதிக வாகன விற்பனை பதிவு Customer Delight Excellence Award’, ‘Sales & Marketing Award’ உள்ளிட்ட மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. மேலும், ஜப்பானின் Toyota Motor Corporation நிறுவனமும் Toyota Lanka நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டி 30 ஆண்டுகால விசேடத்துவத்திற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 

இலங்கையின் மிகவும் போற்றப்படும் வணிக வர்த்தகநாமங்களில் ஒன்றாக Toyota Lanka நிறுவனம் தனது நிலையைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. LMD Brands Annual 2025 இல் இலங்கையின் முதல் தர தயாரிப்பு வர்த்தகநாமம் என அங்கீகரிக்கப்பட்டதுடன், 2026 இல் LMD வாசகர்களின் தெரிவு விருதுகள் 2026 இல் Most Loved Brand விருதையும் பெற்றது. அத்துடன், ‘இலங்கையின் Top 10 Best Employers’ ஒருவராகவும் தரவரிசைப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர் திருப்தி மற்றும் ஊழியர் மேன்மை ஆகிய இரண்டிலும் தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது. 

Toyota நிறுவனத்தின் ‘Mobility for All’ (அனைவருக்கும் போக்குவரத்து) எனும் உலகளாவிய தொலைநோக்கு மற்றும் Toyota Lanka நிறுவனத்தின் LIFE மதிப்புகளான Loyalty, Integrity, Fairness, Ethicality (விசுவாசம், நேர்மை, நியாயம், நெறிமுறை) ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியான ஊழியர்களையும் உருவாக்க நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட இந்த தத்துவமானது, வாகன விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் முதல் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலைபேறான போக்குவரத்து அனுபவங்களை வழங்கும் புத்தாக்க கண்டுபிடிப்பு தீர்வுகள் வரை Toyota Lanka நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளையும் வடிவமைக்கிறது. 

Toyota Hilux மற்றும் Toyota RAV4 ஆகியவற்றின் இந்த அறிமுகமானது, Toyota Lanka நிறுவனத்தின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் விசேடத்துவத்திற்கான தொடர்ச்சியான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை குறிக்கிறது. தனது தேசிய ரீதியிலான தடத்தை விரிவுபடுத்தி, விற்பனைக்குப் பிந்தைய திறன்களை வலுப்படுத்தி, சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற Toyota தயாரிப்புகளை இலங்கைக்கு தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருவதோடு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெற்றுள்ள நம்பிக்கையை பேணி, போக்குவரத்து துறையை எதிர்காலத்திற்கேற்ற வகையில் வடிவமைப்பதில் Toyota Lanka உறுதியுடன் உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
07
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM


காணொளி
அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

Mobitel 1278