Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
செலான் வங்கி 2026 -1Hஇல் ரூ. 6.1 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாகப் பதிவு செய்கிறது

Aug 3, 2026 - 01:53 PM

செலான் வங்கி 2026 -1Hஇல் ரூ. 6.1 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாகப் பதிவு செய்கிறது
Mobitel Inner 1278

● வருமான வரிக்கு முன்னரான இலாபம் - ரூ.9.3 பில்லியன் 10.10%ஆல் அதிகரிப்பு 

● வரிக்குப் பின்னரான இலாபம் - ரூ.6.1 பில்லியன் 10.78%ஆல் அதிகரிப்பு 

● மொத்த சொத்துக்கள் ரூ.976 பில்லியனை எட்டியது 

● உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 14.74% 

● மதிப்பிறக்க கட்டணங்கள் (நிலை 3) விகிதம் 1.03% வங்கி, 2026 -1Hஇல் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ.9,298 மில்லியனைப் பதிவு செய்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் ரூ.8,444 மில்லியனுடன் ஒப்பிடும்போது 10.10% வளர்ச்சியைக் குறிக்கின்றது. 

ஜூன் 30, 2026 இல் முடிவடைந்த 6 மாதங்களில், வங்கி வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ.6,080 மில்லியனைப் பதிவு செய்தது, இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.5,489 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 10.78% வளர்ச்சியைக் குறிக்கிறது. 

நிதி செயல்திறன் அறிக்கை 

நிகர வட்டி வருமானம் ரூ.17,762 மில்லியனிலிருந்து ரூ.19,560 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 10.12% வளர்ச்சியை பிரதிபலிக்கின்றது. கடந்த 12 மாதங்களில் வங்கியின் மொத்த சொத்துக்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சி இதன் முக்கிய காரணமாகும். H1 2025 இன் இறுதியில் ரூ.812 பில்லியனாக இருந்த மொத்த சொத்துக்கள், 30 ஜூன் 2026 இல் ரூ.976 பில்லியானாக அதிகரித்துள்ளது. வங்கியின் நிகர வட்டி மிகை (NIM) 2025 இல் 4.50% இலிருந்து 2026 H1இல் 4.16% ஆக குறைந்திருந்தது. 

அதே வேளை, வங்கியின் நிகர கட்டண அடிப்படையிலான வருமானம் 20.85% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது ரூ.3,847 மில்லியனில் இருந்து ரூ.4,650 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்கு முதன்மையாக அட்டைகள், பணம் அனுப்புதல், வர்த்தகம், கடன்கள் மற்றும் பிற நிதிச் சேவைகளிலிருந்து வரும் கட்டண வருமானம் என்பவை காரணிகளாக அமைந்தது. 

விற்பனைக்கான தேறிய இலாபம்/(நட்டம்), நிதிச் சொத்துக்களின் அங்கீகார நீக்கத்திலிருந்து தேறிய இலாபம் மற்றும் ஏனைய தொழிற்பாட்டு வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிற வருமானங்கள், அதிகரித்த வர்த்தகப் பரிவர்த்தனை அளவுகளின் காரணமாக ஏற்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று இலாபங்களால், இக்காலப்பகுதியில் உயர்வைப் பதிவுசெய்தது. எனினும், நடைமுறையிலிருந்த சந்தை வட்டி வீதங்களும் அவற்றுடன் தொடர்புடைய விலை மாற்றங்களும் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, அரசாங்கப் பத்திரங்களிலும் பங்கு முதலீடுகளிலும் பதிவான சந்தைமதிப்பு அடிப்படையிலான (Mark-to-Market) இலாபங்கள் குறைந்தமை, மேற்கண்ட உயர்வை ஓரளவு ஈடுசெய்தது. 

வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ.25,542 மில்லியனாக பதிவு செய்யப்பட்டது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ.22,536 மில்லியனுடன் ஒப்பிடும்போது 13.34% அதிகரிப்பாகும். 

மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் H1 2025இன் ரூ.10,753 மில்லியனில் இருந்து 14.23% ஆல் அதிகரித்து, H1 2026இல் ரூ.12,282 மில்லியனை அடைந்தன. பணியாளர்கள் தொடர்பான செலவுகள் 12.96% ஆல் அதிகரித்து, ரூ.5,801 மில்லியனில் இருந்து ரூ.6,553 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்கு வருடாந்த சம்பளத் திருத்தங்கள் பிரதான காரணமாக இருந்தன. பெறுமானத் தேய்வு மற்றும் பெறுமானக் குறைப்பு செலவீனங்கள் உள்ளிட்ட பிற தொழிற்பாட்டுச் செலவுகள் 15.72% ஆல் அதிகரித்தன. இது இக் காலகட்டத்தில் நுகர்வுப் பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளின் விலைகள் அதிகரித்தமையை வெளிப்படுத்துகிறது. மேல்நிலைச் செலவுகளை திறம்பட நிர்வகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செலவுக் கட்டுப்பாட்டு முயற்சிகளை வங்கி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

வங்கி, H1 2026இல் ரூ. 733 மில்லியன் பெறுமதியான மதிப்பிறக்கக் கட்டணத்தை பதிவுசெய்தது. இது H1 2025இன் ரூ.419 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 74.98% உயர்வாகும். உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், வாடிக்கையாளர் கடன் ஆபத்து விவரக் குறிப்பு மற்றும் வங்கியின் கடன் பிரிவின் ஒட்டுமொத்த கடன் தரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் மதிப்பிறக்க ஏற்பாடுகள் விவேகத்துடன் செய்யப்படுவதை வங்கி உறுதிப்படுத்தியது. இது நிதி அறிக்கைகளில் போதுமான தன்மையை உறுதி செய்தது. வங்கியின் சொத்துத் தர விகிதங்கள் தொடர்ச்சியாக வலுவாக இருந்தன. ஜூன் 30, 2026 நிலவரப்படி, மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் 1.03% (2025: 1.03%) ஆகவும் நிலை 3 வழங்கல் காப்பு விகிதம் 85.26% ஆகவும் இருந்தன. இது வங்கித் துறையில் உயர்ந்த பதிவாகும். 

H1 2026இற்கான வருமான வரிச் செலவுகள் ரூ.3,218 மில்லியனாக இருந்தன. இது H1 2025இல் ரூ.2,956 மில்லியனாக இருந்தது. நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) ரூ.2,564 மில்லியனிலிருந்து ரூ.2,833 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) ரூ.356 மில்லியனிலிருந்து ரூ.396 மில்லியனாக அதிகரித்துள்ளது. 

நிதி நிலைமைக் கூற்று 

வங்கியின் மொத்த சொத்துக்கள் H1 2026இன் போது ரூ.921 பில்லியனிலிருந்து ரூ.976 பில்லியனாக அதிகரித்தது. இது கடந்த ஆறு மாத காலப்பகுதியில் நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. வங்கி 1H 2026இன் போது தனது தற்போதைய வாடிக்கையாளர் தளத்தை தக்க வைத்துக் கொண்டு, வங்கிக்கு புதிதாக வரும் கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகளை பின்தொடர்ந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ.600 பில்லியனிலிருந்து ரூ.650 பில்லியனாக உயர்ந்த அதே வேளை வைப்புத்தொகை ரூ.733 பில்லியனிலிருந்து ரூ.771 பில்லியனாக உயர்ந்தது. வங்கியின் CASA விகிதம் 27%இல் பராமரிக்கப்பட்டது. 

முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள் 

ஜூன் 30, 2026 நிலவரப்படி, வங்கி நல்ல மூலதனத்துடன் ஒழுங்குமுறை குறைந்தபட்சங்களை விட அதிகமான மூலதன போதுமான விகிதங்களையும் கொண்டிருந்தது. CET1 மற்றும் மொத்த படி 1 மூலதன விகிதங்கள் 10.91% ஆகவும் மொத்த மூலதன விகிதம் 15.56% ஆகவும் இருந்தது. இது வலுவான மூலதன தளத்தை பிரதிபலிக்கிறது. வங்கி சட்டப்பூர்வ தேவையை விட அதிகமாக திரவத்தன்மை காப்பு விகிதத்தை (LCR) பராமரித்தது. அனைத்து நாணய LCR விகிதமும் ரூபாய் LCR விகிதமும் முறையே 187.03%ஆகவும் 175.88% ஆகவும் பராமரிக்கப்பட்டன. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 14.74% (2025 – 15.89%) ஆகவும், சராசரி சொத்துக்களின் மீதான வருவாய் (வரிக்கு முன்னரான இலாபம்) 1.98% (2025 – 2.31%) ஆகவும் இருந்தது. 

H1 2026இல் வங்கியின் பங்கு ஒன்றின் இலாபம் ரூ.9.57 ஆக இருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.8.63 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜூன் 30, 2026 அன்று வங்கியின் ஒரு பங்கிற்கான நிகர சொத்து பெறுமதி ரூ.132.87 ஆக இருந்தது (குழுமம் - ரூ.136.24). 

H1 2026இன் போது, செலான் வங்கி மேலும் 5 “செலான் பஹசர நூலகங்களைத்” திறந்ததன் மூலம் தனது முதன்மையான சமூகப் பொறுப்புணர்வு முயற்சியை மேலும் விரிவுபடுத்தியது. இதன் மூலம் நிறுவப்பட்ட மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல், அறிவு மற்றும் கற்றல் வளங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதுடன் நாடெங்கிலும் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வியை வளர்ப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

Fitch மதிப்பீடுகள் செலான் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிலையான கண்ணோட்டத்துடன் இரண்டு புள்ளிகளால் 2025இல் உயர்த்தி A+(lka) ஆக மேம்படுத்தியுள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
07
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM


காணொளி
அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

Mobitel 1278