Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகையிடம் பணம் பறிப்பு!

Aug 3, 2026 - 04:21 PM

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகையிடம் பணம் பறிப்பு!
Mobitel Inner 1278

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி சீரியல் நடிகையிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து, பின்னர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 38 வயதான சீரியல் நடிகை, கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த நடிகைக்கு ஷேக் முத்தலிக் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகையிடம் ஷேக் முத்தலிக், தனக்கு சினிமாவில் பல பேருடன் பழக்கம் இருப்பதாகவும், சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இதனை நம்பி சீரியல் நடிகை ஷேக் முத்தலிப்புடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், செங்கல்பட்டில் ஒரு விருது விழா நடந்துள்ளது. அந்த விழாவிற்கு நடிகையை வரச்சொல்லி ஷேக் முத்தலிக் அழைத்துள்ளார். இதன்படி நடிகை அங்கு சென்றபோது, திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் சினிமா வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும் கூறி நடிகையை அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் நடிகையுடன் உல்லாசமாக இருந்ததை ஷேக் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். இதன் பின்னர் அந்த நடிகை ஷேக்கிடம் சினிமா வாய்ப்பு குறித்து கேட்டபோது, தன்னிடம் இருந்த வீடியோவை காட்டி நடிகையை மிரட்டிய ஷேக் முத்தலிக், வீடியோவை கசியவிடாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளார். 

இதனால் அந்த நடிகை சுமார் 2 லட்சம் ரூபாய் பணம், 11 சவரன் நகை ஆகியவற்றை ஷேக்கிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதற்குப் பிறகும் தொடர்ந்து அந்த நடிகையை ஷேக் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த மிரட்டல் வேலைக்கு ஷேக்கின் நண்பர் சுரேஷ் கண்ணா என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த நடிகை, தனது நடந்த விஷயங்கள் குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார் ஷேக் முத்தலிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் கண்ணா தலைமறைவான நிலையில், அவரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278