Header Logo
சினிமா
ராமராக ரன்பீர் கபூர்!

Aug 3, 2026 - 05:37 PM

ராமராக ரன்பீர் கபூர்!
Mobitel inner

நிதிஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி, இந்தியா முழுவதும் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளப் படம் இந்துக்களின் புராணக் கதைகளில் ஒன்றான ராமாயணத்தை கருப்பொருளாக கொண்டு உருவாகியுள்ள ராமாயணா. 

இப்படத்தில் ராமராக பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி 35 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இதனை சூழ்ந்துள்ள ஒரு சர்ச்சை என்றால் அது ராமர் கதாப்பாத்திர தேர்வுதான். 

ரன்பீர் கபூரின் கடந்தகால வாழ்க்கைகள் மற்றும் முகத்தில் ராமருக்கான கலை இல்லை என பல காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் புகழ்பெற்ற ராமாயணம் தொடரின் இயக்குநர் ராமானந்த் சாகரின் பேரனும் ரன்பீர் கபூரின் தேர்வு குறித்துப் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. 

“நான் டிரெய்லரைப் பார்த்தேன். அவர்கள் முன்பு வெளியிட்ட டீசரில் மிகக் குறைவான தகவல்களே இருந்ததால் டிரெய்லர், ப்ரோமோவை விட மிகவும் சிறப்பாக இருந்தது. டிரெய்லரில், கதாபாத்திரங்களையும், விஎஃப்எக்ஸ்-ஐயும் அதிகமாகக் காண முடிந்தது. 

ஒட்டுமொத்தமாக, ராவணனாக யஷ் மற்றும் சீதையாக சாய் பல்லவியின் தேர்வு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் அவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்திய நடிகர்களுக்கு நமது புராணங்கள் நன்கு புரியும். இந்தக் கதைகளை அவர்கள் சிறு வயதிலிருந்தே தங்கள் தாத்தா, பாட்டிகளால் சொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள். 

அதனால், அவர்களுக்கு அந்தக் கதாபாத்திரங்களின் உடல்மொழிகள் நன்றாகத் தெரியும். இந்தக் கதாபாத்திரங்களையும் அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் யஷ் மற்றும் சாய் பல்லவியால் இந்தக் கதாபாத்திரங்களைத் தங்கள் நடிப்பில் முழுமையாக உள்வாங்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன். ஆனால், மற்ற நடிகர்களை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. 

பொதுவாக நாங்கள் ராமர் போன்ற ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு புதுமுகத்தைத் தேர்ந்தெடுப்போம். ஏனென்றால், 'அனிமல்' படத்திற்குப் பிறகு ரன்பீர் ராமராக ஏற்றுக்கொள்ளப்படுவாரா என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை, ஆனால் விஎஃப்எக்ஸ் மிகவும் நன்றாக இருந்தது.” என தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

இதில் அரசியல் நோக்கம் கிடையாது!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

எங்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே ஒன்று கூடியுள்ளோம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

சீரற்ற வானிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துங்கள்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

3 விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை!

அது அறவழியா, ஆயுதமா?

அது அறவழியா, ஆயுதமா?

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

Mobitel Upahara