Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
ROLEX படம் எப்போது!

Aug 5, 2026 - 11:57 AM

ROLEX படம் எப்போது!
Mobitel inner

தமிழ் சினிமாவின் பிரபல ஜோடி சூர்யா – ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை பேட்டியில் விளக்கினர். நல்ல கதையுடன் யாரும் அணுகாததால், தானாக நடக்கும் ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் என இருவரும் கூறினர். சூர்யா ‘விஸ்வநாத் & சன்ஸ்’, ஜித்து மாதவன் படங்களை முடித்ததாகவும், ஜோதிகா சன்னி தியோலுடன் நடிக்கும் புதிய படங்களைப் பற்றி பகிர்ந்தார். 

தமிழ் சினிமாவில் ஸ்டார் தம்பதி சூர்யா ஜோதிகா. இவர்கள் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும், திருமணத்துக்கு பின் தனித்தனியாகவே நடித்து வருகின்றனர். அதை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா கூறுகையில் "இந்த பேட்டிக்காக எடுக்கப்பட்ட ஷூட் நடக்கும் போதுதான், இதற்கு முன் இது நடந்தது 20 வருடங்களுக்கு முன்பு என்பது நினைவுக்கு வந்தது. சில விளம்பரங்களில் நடித்தோம். நாங்கள் இணைந்து நடிக்கும் படம் கூட தானாக நடக்க வேண்டும் என்று தான் காத்திருக்கிறோம்." என்றார். 

ஜோதிகா சொன்ன போது "நாங்கள் இணைந்து நடிப்பதற்கான கதையுடன் ஒரு ஒருமுறை தான் அணுகினார்கள். நல்ல கதையோ, மோசமானதோ என்பதை எல்லாம் தாண்டி அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை. ஆஃப் ஸ்க்ரீனில் எங்கள் ஜோடிக்கு நிறைய அன்பு கிடைக்கிறது. திருமணத்துக்கு பிறகு ஆன் ஸ்க்ரீன் ஜோடியாக எங்களை யாரும் பார்க்கவில்லை என நினைக்கிறேன்." என்றார். 

மேலும் அடுத்து சூர்யா, ஜோதிகா படங்கள் பற்றி கேட்கப்பட்டதும். "நான் `விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் நடித்திருக்கிறேன். ஜித்து மாதவன் படமும் முடிந்துவிட்டது." என்றார். தொடர்ந்து பேசிய ஜோதிகா "சன்னி தியோலுடன் ஒரு படம் நடிக்கிறேன். 

இன்னும் ஒரு படம் உள்ளது ஆனால் இப்போது அது பற்றி கூற முடியாது" என்றார். பின்பு ரோலக்ஸ் படம் குறித்து சூர்யாவிடம் கேட்கப்பட "லோகேஷ் தற்போது அல்லு அர்ஜூன் படத்தில் பிஸியாக இருக்கிறார், அடுத்து `விக்ரம் 2' படமும் அவருக்கு இருக்கிறது. இருந்தாலும் பேட்டிகளில் ரோலக்ஸ் இருக்கிறது அதனை எழுதி வருகிறேன் எனக் கூறுகிறார். எப்போது உருவாகும் எனபதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்." என்றார்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara