Header Logo
செய்திகள்
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் நிறைவு!

Aug 6, 2026 - 06:52 AM

இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் நிறைவு!
Mobitel inner

இலங்கைக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று (5) மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். 

அவரது இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி, பிரதமர், வௌிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடிருந்தார். 

இந்நிலையில், வெளிவிவகாரச் செயலாளரின் இந்த விஜயமானது இருதரப்பு உறவுகளின் முழுமையான பரிமாணங்களையும் மீளாய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பன்முகப்படுத்தப்பட்ட இந்தியா - இலங்கை பங்காளித்துவத்தின் வலிமையையும் மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

டித்வா' புயலின் பின்னர் இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்புப் பொதியின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய ரூபாய் கடன் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டது. 

அத்துடன், இருதரப்பு பாதுகாப்பு, அரசியல் நகர்வுகள், சிறுபான்மையினரின் நலன் திட்டங்கள், மீனவ பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara