Aug 7, 2026 - 06:22 PM

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்படி, இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது வரை நாடு முழுவதும் டெங்கு நோயினால் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மரண வீதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மட்டும் 3,175 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மொத்த நோயாளர்களில் 52.96% (46,885 பேர்) மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக தென் மாகாணம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.
மாவட்ட ரீதியில் பார்க்கும் போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் (18,832 பேர்).
இதர மாவட்டங்களின் விவரம்:
கொழும்பு மாவட்டம்: 17,568 நோயாளர்கள்
கண்டி மாவட்டம்: 6,228 நோயாளர்கள்
மேலும், நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிடாயப் பகுதிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளன.





