Header Logo
செய்திகள்
குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்

Aug 7, 2026 - 05:31 PM

குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்
Mobitel inner

குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை பதற்றமான நிலைமை நிலவிய இவ்விரு சிறைச்சாலைகளின் நிலைமையும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (07) காலை குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை, பின்னர் நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் உருவானது.

இப்பதற்றமான சூழ்நிலையினால் குருவிட்ட சிறைச்சாலையின் 13 கைதிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர்.

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பதற்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் விமானப் படையினரின் உதவியும் பெறப்பட்டது.

இருப்பினும், பதற்ற நிலைமை நிலவிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara