Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
'தர்மன்' படத்தை சுந்தர்.சி ஏன் இயக்கவில்லை?

Aug 6, 2026 - 11:37 AM

'தர்மன்' படத்தை சுந்தர்.சி ஏன் இயக்கவில்லை?
Mobitel inner

'தலைவர் 173' படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தொடர்பான நடிகை குஷ்பூ நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். 

 

தற்காலிகமாக 'தலைவர் 173' என்று அழைக்கப்பட்ட இப்படத்தை, ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் வைத்தியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

'தர்மன்' படத்தை ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. அதன்பிறகே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். 

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகையும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பூ இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஏதோ ஒரு காரணத்தால் சுந்தர்.சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகினார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய குஷ்பூ, "ஒரு இயக்குநருக்கு எந்தப் படத்தை இயக்க வேண்டும், எந்தப் படத்தை இயக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் முழு உரிமை இருக்கிறது. சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்ற தகவலை கமல்ஹாசன் சாருக்கு தொலைபேசி மூலம் நான்தான் தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது திரையுலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara