Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
உயர் நீதிமன்றம் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன்!

Aug 6, 2026 - 12:01 PM

உயர் நீதிமன்றம் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன்!
Mobitel Inner 1278

தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து 15 கோடி ரூபா இழப்பீடு வழங்க கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது பெயர், படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளை பாதுகாக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மனுவில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பின் செய்து ஆபாசமான முறையில் புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் படத்தைப்பயன்படுத்தி இணையத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து 15 கோடி ரூபா இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், இதுபோன்ற செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

சமீபகாலமாக AI மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளின் முகத்தை மார்பின் செய்து ஆபாசமான முறையில் புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இதனை கண்டித்து பல நடிகைகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை மிருணாள் தாகூர் கூட தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278