Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ரிலீஸுக்கு முன் மாஸ் அப்டேட்

Aug 6, 2026 - 01:39 PM

ரிலீஸுக்கு முன் மாஸ் அப்டேட்
Mobitel Inner 1278

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிசி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் படக்குழு புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகை சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும், வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன. மேலும், இந்த டிரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு கவனம் பெற்றது. 

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC), 'டிசி' திரைப்படத்திற்கு 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. வன்முறை நிறைந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், பெரியவர்களை இலக்காகக் கொண்டு வெளியாக உள்ளது. 

இதற்கு முன்பு வெளியான 'பூம் பா டிகா டிகா', 'ராகா ஆப் ரிவெஞ்ச்', 'ஹேங் ஓவர்' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இந்த நிலையில், படம் நாளை (07) ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ரிலீஸுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278