Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
The Banker சஞ்சிகையின் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகள் தரவரிசையில் இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது பிரிட்

Aug 6, 2026 - 03:48 PM

The Banker சஞ்சிகையின் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகள் தரவரிசையில் இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது  பிரிட்
Mobitel Inner 1278

பிரிட்டனின் புகழ்பெற்ற The Banker சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 1000 வங்கிகள் (Top 1000 World Banks) தரவரிசையில், இலங்கையின் முதலாவது வங்கியாகத் தெரிவாகியுள்ள கொமர்ஷல் வங்கி, உலகளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் தனது நிலையை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. 

வங்கியின் நிதி நிலையை மதிப்பீடு செய்வதற்காக The Banker சஞ்சிகையினால் பயன்படுத்தப்படும் முதன்மை அளவுகோலான Tier I மூலதனத்தில் 12.1% வளர்ச்சியைப் பதிவு செய்ததன் மூலம், உள்நாட்டு வங்கிகளுக்கு மத்தியில் கொமர்ஷல் வங்கி இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளது. இத்தரவரிசையில் கொமர்ஷல் வங்கி உள்வாங்கப்பட்ட 14 ஆவது சந்தர்ப்பம் இது என்பதுடன், இலங்கையின் எந்தவொரு நிதி நிறுவனமும் இவ்வளவு அதிக தடவைகள் இந்த உலகளாவிய பட்டியலில் இடம்பிடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், உலகின் தலைசிறந்த 1000 வங்கிகள் பட்டியலில் இடம்பிடித்த முதலாவது இலங்கை வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி திகழ்ந்து, இத்துறைக்கான ஒரு சிறந்த முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. 

இந்த மைல்கல் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க அவர்கள்: இத்தகைய உயரிய உலகளாவிய தரவரிசையில் இலங்கை வங்கிகளுக்கு மத்தியில் முதலிடத்தைப் பிடித்திருப்பது, வங்கியின் கட்டுக்கோப்பான மூலதன முகாமைத்துவத்திற்கும், மாறிவரும் சந்தைச் சூழலில் அதன் உறுதித்தன்மைக்கும், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொண்டு நீண்டகால பெறுமதியை உருவாக்கும் திறனுக்கும் ஒரு சிறந்த சான்றாகும். எமது அடிப்படை வலிமையைப் பேணுவதற்கும், வங்கித் துறையின் எதிர்காலத்தை வரையறுக்கும் ஆற்றல்களை கட்டியெழுப்புவதற்கும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது எனத் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், உலகின் மிகப் பெரிய வங்கிகளை மதிப்பீடு செய்வதற்கு The Banker சஞ்சிகையினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகள் தரவரிசையே சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அளவுகோலாகும். 14 ஆவது வருடமாக இப்பட்டியலில் இடம்பெறுவதானது எமது வலிமை மற்றும் ஸ்திரத்தன்மைக்குக் கிடைத்த ஒரு சுயாதீனமான சான்றாகும். இது கொமர்ஷல் வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வங்கியுடன் அவர்கள் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த சான்றாகும் எனத் தெரிவித்தார். 

உலகின் 5,000 க்கும் மேற்பட்ட மிகப் பெரிய வங்கிகளின் தரவுத்தளத்தைக் கொண்டு தொகுக்கப்படும் The Banker Top 1000 தரவரிசையானது, வங்கிகளின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை அளவிடும் உலகின் மிகவும் நம்பகமான அளவுகோலாகக் கருதப்படுகிறது. இத்தரவரிசையானது முதன்மையாக Tier I மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டதுடன், பரந்த அளவிலான ஏனைய செயல்திறன் குறிகாட்டிகளையும் கருத்திற் கொள்கின்றது. 

இவ் வருட முடிவுகள் குறித்து The Banker சஞ்சிகை வெளியிட்டுள்ள குறிப்பில், உலகளாவிய வங்கித் துறையானது வலுவான மூலதன இருப்புகளுடன் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவும், சொத்துக்களுடனான Tier I மூலதன விகிதம் கடந்த தசாப்தத்தில் காணப்பட்ட உயர் மட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் போன்ற வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, வங்கித் துறை தனது மூலதன வலிமையுடன் சுறுசுறுப்பான செயல்பாடுகளையும் புதிய திறன் தொகுப்புகளையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என அச்சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278